×

விருத்தாசலம் அருகே கோவில், வீடுகளில் இயங்கும் அரசு பள்ளி!: புதிய கட்டிடம் கட்டித்தர ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே கோவில் மற்றும் வீடுகளில் இயங்கி வரும் அரசுப்பள்ளிக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டி தர மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கவனை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 42 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்ள நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்போவதாக கூறி பாழடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்தனர். ஆனால் இதுவரை பள்ளி கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் பள்ளி குழந்தைகள் அங்குள்ள வாடகை வீட்டில் படித்து வருகின்றனர். மேலும் இடப்பற்றாக்குறை காரணமாக அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் ஒருபகுதி மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

போதிய இடம் வசதி இல்லாமலும், கழிப்பறை, குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமலும் சிரமங்களை சந்திப்பதால் விரைவில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துளள்னர். இதனிடையே குறுகலான இடத்தில் பாடம் நடத்த வேண்டியிருப்பதால் மாணவர்களுக்கும் படிப்பிலும் கவனசிதைவு ஏற்பட்டு வருவதாக ஆசிரியர்களும், பொதுமக்களும் கூறுகின்றனர். எனவே அரசு உடனடியாக புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என அக்கிராமத்தின் பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Awarthasalam , Vriddhachalam, temple, house, government school
× RELATED விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயில்...